மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்.

ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஊழலை ஒழிக்கவும், அனைத்து ஆவணங்கள் மற்றும் பணிகளில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கவும் மின்னணு அலுவலகமுறையை அமைச்சகம் 100% அமல்படுத்தியுள்ளது. மேலும் அனைத்து கொள்முதல்களும் அரசின் மின்னணு சந்தை தளம் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது.

வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையின் அவசியம் குறித்து அரசு அதிகாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின்போது “ஊழலற்ற இந்தியா- வளர்ந்த இந்தியா” என்ற கருப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சிகளை அமைச்சகம் நடத்தியது.

தொடக்க நாளான அக்டோபர் 31-ஆம் தேதி, இணைய வழியாக ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அமைச்சக ஊழியர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். கட்டுரை மற்றும் சுவரொட்டி தயாரித்தல் போட்டிகளும் நடத்தப்பட்டன.

திவாஹர்

Leave a Reply