புதுமை கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க இந்திய ரயில்வே புதுமை கண்டுபிடிப்புகள் இணையதளத்தில் 768 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

ரயில்வேக்கான ஸ்டார்டப் முன்னெடுப்பை  இந்திய ரயில்வே 13.06.2022 அன்று தொடங்கியது.  இதுவரை புதுமை கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க இந்திய ரயில்வே புதுமை கண்டுபிடிப்புகள் இணையதளத்தில் 768 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன

மொத்தம் இதுவரை வந்துள்ள 311 விண்ணப்பங்களில் 13 புதுமை கண்டுபிடிப்பு சவால்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பங்களும் இரண்டு நிலைகளில் மதிப்பீடு செய்யப்பட்டது. ஒரு புதுமை கண்டுபிடிப்பு சவால் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு விட்டது.

311 விண்ணப்பங்களில் ஸ்டார்டப் சார்பாக 123 விண்ணப்பங்களும் தனிநபர் சார்பாக 60 விண்ணப்பங்களும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பாக 81 விண்ணப்பங்களும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் சார்பாக 18 விண்ணப்பங்களும் வந்தடைந்ததாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

எம் பிரபாகரன்

Leave a Reply