இமாச்சல பிரதேசத்தில் நீர் விளையாட்டு மையத்தை அனுராக் சிங் தாக்கூர் திறந்து வைத்தார்.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் உள்ள கோல்டம் பர்மானாவில் நீர் விளையாட்டு மையத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், ஞாயிறன்று காலை திறந்துவைத்தார். இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் இணைந்து இமாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக நீர் விளையாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

குறுகிய காலத்தில்  இந்த மையம் எவ்வாறு அமைக்கப்பட்டது என்பதைப் பகிர்ந்து கொண்ட திரு அனுராக் சிங் தாக்கூர், “ஒரு மாதத்தில், நீர் விளையாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இதை சாத்தியமாக்கிய இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய அனல் மின் கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ரோயிங், கயாக்கிங், கனோயிங் ஆகிய முறையில் படகுப் போட்டிகளில் பங்கேற்கும் 40 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதிநவீன உபகரணங்கள், சிறுவர், சிறுமியர் விடுதி மற்றும் பயிற்சி வசதிகள் உள்ளன. இந்த மையத்தில்  தேசிய போட்டிகளும்  இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

இந்த நிகழ்வின் போது, குஜராத்தில் நடைபெற்றுவரும் 36வது தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இமாச்சலப் பிரதேச மகளிர் கபடி அணியை தாக்கூர் பாராட்டினார்.

திவாஹர்

Leave a Reply