மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் வாஷிங்டனில் உரையாடினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், விண்வெளி மற்றும் அணு எரிசக்தி துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வர்த்தக சபையின் தலைமை செயலகத்தில்  உரையாடினார்.

விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் இந்தியாவும், அமெரிக்காவும் வெற்றிகரமாக ஒத்துழைத்து வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் அப்போது தெரிவித்தார். புவி கண்காணிப்பிற்கான கூட்டு ரேடார் செயற்கைகோளை செலுத்துவதற்கு இஸ்ரோவும், நாசாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியால், இந்தியாவின் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த வர்த்தகக் கூட்டத்தில் கூகுள், ஃபெடக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள்  மற்றும் நாசா உள்ளிட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் 5 நாட்கள்  பயணம் மேற்கொண்டு வரும் டாக்டர் ஜிதேந்திர சிங், பென்சில்வேனியா, பிட்ஸ்பர்கில் செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும் சர்வதேச தூய்மை எரிசக்தி நடவடிக்கை மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். பிரபல கல்வியாளர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் அவர் சந்தித்து பேச உள்ளார்.

திவாஹர்

Leave a Reply