பொது-தனியார் ஒருங்கிணைப்பில் மின்சாரத்தை அடிப்படையாக கொண்ட, தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும் பொதுப்போக்குவரத்து அமைப்புக்கு நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

பொது-தனியார் ஒருங்கிணைப்பில் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட, தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும் பொதுப்போக்குவரத்து அமைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘இன்சைட் 2022’: பசுமை மற்றும் தூய்மைப் போக்குவரத்துக்கான, நிலையான மற்றும் புதுமையான நிதி குறித்த சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய அவர், செயல்படுத்துவதற்கு உகந்த சரியான மாதியாக இருந்தால், மூலதன முதலீடு ஒரு பிரச்சினை அல்ல என்று தெரிவித்தார். தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறினார். லண்டனின் போக்குவரத்து முறையைப் பாராட்டிய அமைச்சர், மக்கள் குறைவான கட்டணத்தில் அதிக வசதியை விரும்புவதாக குறிப்பிட்டார். பேருந்துக் கழகங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யவும், பயணத்தை எளிதாக்கவும், கைகளால் பயணச்சீட்டு தரும் முறைக்கு பதிலாக, அட்டை அல்லது க்யூஆர் குறியீடு முறையிலான பயணச்சீட்டை பயன்படுத்த அவர் பரிந்துரைத்தார்.

மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், காற்று மாசு குறைவதுடன், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்றும் தெரிவித்தார்.

15 லட்சம் கோடியில் ஆட்டோமொபைல் துறையை உருவாக்க அரசு முயற்சித்து வருவதாகவும், இது 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும், அதிகப்பட்ச வேலைவாய்ப்புகளை கொண்ட தொழில் ஆகும் என்றும் நிதின் கட்கரி கூறினார்.

உலகிலேயே அதிக அளவில், 5,450 மின்சார பேருந்துகளை ஏலத்தில் எடுத்த சிஈஎஸ்எல்-ஐ அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். வருங்காலம் பசுமை ஹைட்ரஜனின் காலம் என்று அவர் கூறினார். புதுதில்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு மின்வழித்தடம் அமைக்கவும் அமைச்சர் முன்மொழிந்தார். பொருளாதார நம்பகத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு, மாற்று எரிபொருள்கள், போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply