வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான இணையவழி ஏலம், இன்று தொடங்குகிறது.

வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான இணையவழி ஏலம், இன்று தொடங்குகிறது.இதற்கான தொழில்நுட்ப மதிப்பீடுகள் நிறைவடைந்ததையடுத்து, பத்து சுரங்கங்களுக்கான ஏலம் தொடங்குவதாக நிலக்கரி அமைச்சகம் கூறியுள்ளது.எட்டு சுரங்கங்களுக்கான ஏலம் இன்றும், இரண்டு சுரங்கங்களுக்கான இணையவழி ஏலம் நாளையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, 43 சுரங்கங்களுக்கான ஏலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply