ஜப்பான்-இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சி- ஜிமெக்ஸ் 2022.

ஜப்பான்-இந்தியா கடல்சார் பயிற்சி- ஜிமெக்ஸ் 2022-வின் 6-வது பயிற்சி செப்டம்பர் 11-ந் தேதி வங்கக்கடலில் மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படை நடத்தும் இந்த பயிற்சியில் ஜப்பானின் எஸ்கார்ட் ப்ளோடில்லா ஃபோர்-ன் கமாண்டர் ரியர் அட்மிரல் ஹிராட்டா டோஷியுக்கி தலைமையில் ஜப்பான் பாதுகாப்பு கப்பல்களும், இந்திய கடற்படையின் கிழக்குப்பிராந்திய கொடி அதிகாரி கமாண்டிங் ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையில் இந்திய கடற்படை கப்பல்களும் இந்த பயிற்சியில் ஈடுபட்டன.

ஜப்பானின் கப்பல்களை வங்கக்கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் வரவேற்றன. இந்தியாவின் தரப்பில் சகயாத்ரி, ரன்விஜய், ஜோதி ஆகிய உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கப்பல்கள் இடம் பெற்றுள்ளன.  கடலோர ரோந்துக் கப்பல் சுகன்யா,  நீர்மூழ்கி கப்பல்கள், எம்ஐஜி 29கே போர் விமானம், மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டன.

 ஜிமெக்ஸ்22 கடலிலும், விசாகப்பட்டினம் துறைமுகத்திலும் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

2012-ம் ஆண்டு ஜப்பானில் தொடங்கப்பட்ட ஜிமெக்ஸ் பயிற்சியின் இந்த அத்தியாயம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply