உஸ்பெகிஸ்தானில் நாளைமறுநாள் தொடங்கும் 22வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொள்கிறார்.

உஸ்பெகிஸ்தானில் நாளைமறுநாள் தொடங்கும் 22வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொள்கிறார். இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கும் உஸ்பெகிஸ்தான் அதிபரின் அழைப்பை ஏற்று அவர் இம்மாநாட்டில் பங்கேற்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்த கூட்டமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஷஷாங்காய் மாநாட்டில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பும் பல்வேறு துறைகளை வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

மண்டல அளவிலும், உலக அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் பொருளாதார வர்த்தக தொடர்புகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷாங்காய் மாநாட்டையொட்டி உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்த பிரதமர் நரேந்திர மோதி திட்டமிட்டுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply