2025-க்குள் நாட்டில் காசநோய் ஒழிப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செப்டம்பர் 9 அன்று “பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை” குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைப்பார்.

2025-க்குள் நாட்டில் காசநோய் ஒழிப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செப்டம்பர் 9 அன்று “பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை” மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காணொலி காட்சி மூலம் தொடங்கிவைப்பார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்படும். 2025-க்குள் காசநோயை ஒழிப்பதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்த காணொலி நிகழ்வில் மாநில மற்றும் மாவட்ட சுகாதார நிர்வாகம் பெருநிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சிவில் சமூகம், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். 2018 மார்ச் மாதத்தில் தில்லியில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டின் போது 2030-க்கான நீடிக்கவல்ல இலக்கிற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாட்டில் காசநோயை ஒழிப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார்.

 2025-க்குள் நாட்டிலிருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் இலக்கை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து மக்கள் இயக்கமாக மாற்றவேண்டிய அணுகுமுறையின் தேவையை எடுத்துரைப்பது இந்த தொடக்க நிகழ்வின் நோக்கமாக இருக்கும்.  பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டம் என்பது நோயாளியை மையப்படுத்திய சுகாதார முறையை நோக்கிய முக்கியமான நடவடிக்கையாகும்.

திவாஹர்

Leave a Reply