சில்சாரில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் ஆரோக்கிய மையத்தை டாக்டர்.மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் சேவைகளை எளிதில் பெறுவதற்கும், குறிப்பிடத்தக்க சாதனையாக, ஆரோக்கிய மையங்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது”. 2014-ல், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் ஆரோக்கிய மையங்களின் எண்ணிக்கை 25-ஆக இருந்த நிலையில் தற்போது 75-ஆக உயர்ந்துள்ளது. மக்களுக்கு எளிதில் அணுகும் சுகாதார சேவைகளை வழங்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இது சான்றாக உள்ளது. மக்களவை உறுப்பினர் டாக்டர். ராஜ்தீப் ராய், மற்றும் சில்சார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.சபயன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில், அஸ்ஸாம் மாநிலம் சில்சாரில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் ஆரோக்கிய மையத்தை, திறந்து வைத்த, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா, மக்கள் எளிதில் அணுகக் கூடிய தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். சில்சாரில் உள்ள மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் ஆரோக்கிய மையம், சில்சாரில் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களாக கரீம்கஞ்ச், ஹைலகண்டி மற்றும் பராக் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கும் சுகாதார சேவைகளை அளிக்கும் என்று அமைச்சர் கூறினார். பராக் பள்ளத்தாக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றாக சில்சார் இருந்தாலும், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் பயன்களை பெற ஐஸ்வாலில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரம் அல்லது ஷில்லாங்கிற்கு 208 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியிருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். புதிய ஆரோக்கிய மையம், பல்லாயிரக்கணக்கான மக்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். ஏனெனில், அவர்கள் தற்போது நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை. இந்த ஆரோக்கிய மையங்கள், அரசு மற்றும் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில், மருந்துகள் உள்ளிட்ட புறநோயாளிகள் சேவை, உடல் பரிசோதனைகள், உள்நோயாளிகள் சிகிச்சை ஆகியவற்றை வழங்கும். மேலும், பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வசதிகளை அளிக்கும்.

“புதிய ஆரோக்கிய மையம் தொடங்கப்பட்டதன் மூலம், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் வசதிகளை பெற்றுள்ள குவஹாத்தி, திப்ருகாருக்கு பிறகு அஸ்ஸாமில் மூன்றாவது பெரிய நகரமாக சில்சார் விளங்குகிறது. மருத்துவ சேவைகளை மேம்படுத்த, நாடு முழுவதும் 16 புதிய ஆரோக்கிய மையங்களை விரிவுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்று. மத்திய அரசின் சுகாதாரத் திட்ட சேவைகளின் பயன்களை மக்கள் பெறுவதற்காக மத்திய அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது.

நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக டாக்டர்.மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.64,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த, கொவிட் அவசரகால மீட்பு திட்டம்-1-ன்கீழ் ரூ.15,000 கோடி மற்றும் கொவிட் அவசரகால மீட்பு திட்டம்-2-ன்கீழ் ரூ.23,000 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் 1954-ம் ஆண்டு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விரிவான சுகாதார சேவையை அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. தற்போது 75 நகரங்களில் வசிக்கும் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த திட்டத்தின்கீழ் பயன் பெறுகின்றனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply