புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை!-தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இலங்கைக்கான வானிலை முன்னறிவிப்பு.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டது. நள்ளிரவு 2.30 மணி நிலவரப்படி புதுவையின் கிழக்கு தென்கிழக்கு திசையிலிருந்து 440 கி.மீ. தொலைவிலும். சென்னையிலிருந்து 470 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலையில் நிவர் புயலாக மாறியுள்ளது

இன்று மாலையில் இது தீவிரப் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலையில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே நிவிர் தீவிரப் புயல் கரையைக் கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

satbltn

rsmc

இலங்கை வானிலை முன்னறிவிப்பு:

srilanka

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலை கரைக்குக் கிழக்காக ஏறத்தாழ 370 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 9.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 84.5E இற்கும் இடையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியானது அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு, கிழக்கு கரைகளை அண்மித்ததாக இந்தியாவின் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் 50-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இவ்வாறு இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply