முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்தார் – இந்தியா மற்றும் பிரான்ஸ் படைகள் இடையேயான நீண்டகால உத்திசார் கூட்டு செயல்பாடுகள் குறித்து பிரான்ஸ் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் தனது விரிவான பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்தார். இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான நீண்டகால உத்திசார் கூட்டு செயல்பாட்டை அவரது பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

தமது பயணத்தின்போது பிரான்ஸ் ஆயுதப்படைகளின் உயர்  அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.   பொதுவான நலன்கள் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு அக்கறைகள் குறித்த கருத்துக்களை அவர்கள் விவாதித்தனர்.

உயர்தர தொழில்நுட்பங்களின் பரிமாற்றத்தை மேம்படுத்துவது குறித்தும் திரு அனில் சௌகான், பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். 

இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பு அண்மைக் காலத்தில் வேகம் பெற்றுள்ளதுடன், பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நெருக்கமான மற்றும் பன்முக உறவாக உருவெடுத்துள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply