கொரோனா வைரஸ் தடுப்புப் பணி!-இலங்கை அதிபரிடம் உண்மையைச் சொன்ன இந்திய பிரதமர் நரேந்திர மோதி!- இருவரும் தொலைபேசியில் பேசியது என்ன?-முழு விபரம்.

FILE PHOTO

130 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் ”கொரோனா வைரஸ்” தடுப்புப் பணிகளை கையாள்வது கடினமானது என்ற போதும், நோய்த் தொற்று பரவலை சுமார் 75 சதவீதம் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் இன்று தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களும் இன்று தொலைபேசியில் என்ன பேசிக்கொண்டார்கள்?- என்ற விபரத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கள மொழியில் விபரித்துள்ளார். அதை அப்படியே நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு தமிழில் பதிவு செய்துள்ளோம்.

අද (23) පෙරවරුවේ මා සහ ඉන්දීය අග්රාමාත්ය නරේන්ද්ර මෝදි මැතිතුමා සුහද දුරකථන සංවාදයක නිරත වූ අතර දෙරටේ සෑම ආකාරයකම සබඳතා කොවිඩ් අර්බුදය හමුවේ තවත් වර්ධනය කර ගැනීමට එකඟත්වය පළ විය.
ජනාධිපති කාර්යාලයේ සිට ඉන්දීය නායකයා සමග සාකච්ඡාවට සහභාගි වූ අතර අන්යෝන්ය වැදගත්කමක් සහිත විෂයයන් ගැන අදහස් හුවමාරුවට අවස්ථාව ලැබීම පිළිබඳව සතුට පළ කරමින් වත්මන් දුෂ්කර අවධියේ ශ්රී ලංකාවට කළ උපකාර සම්බන්ධයෙන් මෝදී මැතිතුමාට සහ ඉන්දීය ජනතාවට මාගේ කෘතඥතාව පුද කළෙමි.
ඉන්දියාව ප්රදානය කළ ටොන් 10ක වෛද්යාධාර බෙහෙවින් ප්රයෝජනවත් වූ බව මම එතුමාට පැවසීමි. ඉන්දියාව කොවිඩ් 19 වසංගතය මනාව පාලනය කර ඇති බව මා විශ්වාස කරන අතර ඒ සඳහා ඔහුගේ උත්සාහයට විශේෂයෙන් අඩු වරප්රසාද සහිත කණ්ඩායම් සඳහා හඳුන්වාදුන් ආර්ථික සහන සමූහයට මගේ ප්රසාදය පළකළෙමි. ශ්රී ලංකාවේ රෝග ව්යාප්තිය සතුටුදායක ලෙස පාලනය කිරීමට සමත් වී ඇති බව මා විසින් ප්රකාශ කිරීමත් සමඟ ඉන්දීය අගමැතිතුමා ඊට ප්රතිචාර වශයෙන් සඳහන් කළේ කෝටි 130කට අධික ජනගහණයක් හසුරුවා ගැනීම දුෂ්කර වුවත් වසංගත ව්යාප්තිය 75% කින් පමණ මර්දනයට හැකි වූ බවයි.
ඔහු මා හඳුනාගෙන ඇත්තේ “නිරවුල් චින්තනයක් සහිත ඉක්මණින් දුෂ්කර තීරණ ගැනීමේ හැකියාව ඇති නායකයකු” ලෙස බව මෝදී මැතිතුමා සඳහන් කළේය. “මට තිබෙන තොරතුරු අනුව ශ්රි ලංකාව වසංගතය හොදින් පාලනය කර ගැනීමට සමත්ව තිබෙනවා. එහි ගෞරවය හිමි වන්නේ ඔබතුමාට” ඉන්දීය නායකයා පැවසීය. එවැනි ධනාත්මක ආකල්පයක් මා ගැන දැරීම පිළිබඳව මාගේ කෘතඥතාව පළකර සිටිමි.
දැන් තම ප්රමුඛතාව ආර්ථික පුනරුදය බව මම එතුමාට පැවසූ අතර ප්රධාන පෙළේ ව්යාපෘති කිහිපයක් නැවත පණ ගැන්වීමට ඉන්දියාවේ සහයෝගය අපේක්ෂා කරන බව ප්රකාශ කළෙමි. කොළඹ වරායේ නැගෙනහිර පර්යන්තය කඩිනමින් ඉදිකිරීම ඉන් එකකි. අගය එකතු කළ කාර්මික සහ කෘෂිකාර්මික නිෂ්පාදන ප්රවර්ධනය තවත් අරමුණකි. මේ ක්ෂේත්රවල ආයෝජනය කරන මෙන් ඉන්දීය ව්යාපාරිකයන් සහ දැනටමත් ශ්රී ලංකාවේ සිටින ඉන්දීය සමාගම් දිරි ගැන්විය හැකිනම් පශ්චාත් කොරෝනා අවධියේ අර්ථික පුනරුදයට පිටිවහලක් බව මම ඔහුට පෙන්වා දුන්නෙමි.
දෙරට අතර ක්රියාත්මක මූල්ය පහසුකම් හුවමාරු වැඩසටහන තවත් පුළුල් කිරීමට මම යෝජනා කළ අතර සාක් හුවමාරු පහසුව යටතේ ප්රදානය කර ඇති ඩොලර් මිලියන 400ට ඩොලර් බිලියන 1.1ක මුදලක් එකතු කිරීමට ඉන්දීය ආණ්ඩුව එකඟනම් එය විදේශ විනිමය ගැටලු කළමනාකරණයට විශාල ආධාරයක් බව පෙන්වා දුන්නෙමි.
“ ශ්රී ලංකාවට උදව් කිරීමට මම පෞද්ගලිකවම කැපවී සිටිනවා. ශ්රී ලංකාවට වාසිදායක කොන්දේසි යටතේ සහය වෙන්න අප සූදානම්. ඒ සඳහා කොළඹ ඉන්දීය මහ කොමසාරිස් සමග වැඩ කිරීමට, සුදුසු නියෝජිතයෙක් පත් කරන්න” මෝදි මැතිතුමා පිළිතුරු වශයෙන් කීය.
දැනටමත් ගොඩනැගී ඇති ද්විපාර්ශ්වික හවුල්කාරිත්වය ජනතාවට ඍජු ප්රතිලාභ අත්වන සහ ආහාර හා සෞඛ්ය සුරක්ෂිතතාව ප්රමුඛතාව කොටගත් ව්යාපෘති ලෙස ඉදිරියට ගෙන යාමට දෙදෙනාගේම එකඟත්වය පළවිය.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

இன்று (23) முற்பகல் சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்ட நானும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும் கொவிட் பிரச்சினைக்கு மத்தியிலும் மேலும் மேம்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தோம். 

இலங்கை ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து, இந்திய பிரதமருடன் உரையாடிய நான், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி கருத்துக்களை பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் இலங்கைக்கு செய்த உதவிகள் தொடர்பில் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்தேன். 

இந்தியா அன்பளிப்பு செய்த 10 டன் மருத்துவ உதவிகள் பெரிதும் பயனளித்ததாகவும் நான் குறிப்பிட்டேன். இந்தியா கொவிட் 19 நோய்த் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது என நான் நம்புகின்றேன். அதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு குறிப்பாக குறைந்த வசதிகளைக் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார நிவாரணங்களை நான் பாராட்டுகிறேன். 

இலங்கையில் நாமும் நோய்த்தொற்றை திருப்திகரமாக கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கின்றோம். என்றும் நான் தெரிவித்தேன். 

இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர், 130 கோடி மக்களை கையாள்வது கடினமானது என்ற போதும், நோய்த் தொற்று பரவலை சுமார் 75 சதவீதம் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக தெரிவித்தார். 

தெளிவான சிந்தனையுடன் விரைவாக கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு தலைவராகவே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை தான் புரிந்து வைத்திருப்பதாக பிரதமர் மோடி அவர்கள் என்னிடம் குறிப்பிட்டார். 

என்னிடமுள்ள தகவல்களின் படி இலங்கை நோய்த் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளது. அதன் கௌரவம் உங்களையே சாரும் என்று இந்திய பிரதமர் மோடி அவர்களிடம் தெரிவித்தேன். 

தற்போது தனது முன்னுரிமை பொருளாதார புத்தெழுச்சியாகும் எனக் குறிப்பிட்ட நான், சில முன்னணி திட்டங்களுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தேன். 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விரைவாக நிர்மாணிப்பது அவற்றில் ஒன்றாகும். பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவது மற்றுமொரு நோக்கமாகும். இத்துறைகளில் முதலீடு செய்யுமாறு இந்திய வர்த்தகர்களையும், தற்போது இலங்கையிலிருக்கும் இந்திய கம்பனிகளையும் ஊக்குவிக்க முடியுமானால், அது கொரோனாவுக்கு பிந்திய காலப்பகுதியில் பொருளாதார புத்தெழுச்சிக்கு உதவியாக அமையும் என்றும் நான் குறிப்பிட்டேன். 

இரு நாடுகளுக்கும் இடையில் நடைமுறையில் உள்ள நிதி வசதிகளை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு நான் முன்மொழிந்தேன். 

சார்க் பரிமாற்ற வசதியின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள 400 மில்லியன் டொலர்களுக்கு 1.1 பில்லியன் டொலர்களை சேர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் இணங்கினால், அது அந்நிய செலாவணி பிரச்சினையை முகாமைத்துவம் செய்வதற்கு பெரும் உதவியாக அமையும் என்று, இந்திய பிரதமர் மோடி அவர்களிடம் குறிப்பிட்டேன். 

இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி அவர்கள் ‘இலங்கைக்கு உதவுவதற்கு நான் தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்புடன் உள்ளேன். இலங்கைக்கு சாதகமான நிபந்தனைகளின் கீழ் உதவுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இதற்காக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருடன் இணைந்து பணியாற்றுவதற்கு பொருத்தமான ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்’ என்று தெரிவித்தார். 

தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள இரு தரப்பு கூட்டுப்பங்காண்மையை மக்களுக்கு நேரடி நன்மைகளை கொண்டுவரும் மற்றும் உணவு, சுகாதார, பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்த திட்டங்களாக முன்னெடுப்பதற்கு அவரும் இணக்கம் தெரிவித்தார்.

இவ்வாறு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN May 24, 2020 10:49 am

Leave a Reply