கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து!-பாராளுமன்றத் தேர்தலுடன், கர்நாடகா சட்ட மன்றத்திற்கும் தேர்தல்.

கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, எச்.நாகேஷ், ஆர்.சங்கர் ஆகிய 2 சட்டமன்ற உறுப்பினர்கள், இன்று திடீரென வாபஸ் பெறுவதாக கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

H.NAGESH, MLA.

R.SHANKAR, MLA.

தாங்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால், அடுத்த கட்ட நடவடிக்கையை ஆளுநர் எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரியுள்ளனர். இதனால் கர்நாடகா அரசியலில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து கர்நாடகா சட்ட மன்றத்திற்கும் தேர்தல் நடைபெற வேண்டும். அப்போதுதான் அங்கு ஒரு நிலையான ஆட்சியை அமைக்க முடியும். இதைதான் பாஜக, காங்கிரஸ் இருகட்சிகளுமே விரும்புகிறது.

இதனால் குமாரசாமி தலைமையிலான அரசு நீடிக்க வாய்ப்பில்லை.

கர்நாடக மாநில சட்ட பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம்:

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கர்நாடக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ள எச்.நாகேஷ், ஆர்.சங்கர் ஆகிய 2 சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்தலுக்கு முந்தைய சொத்துக் கணக்கு விபரம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

பலத்தப் பாதுகாப்புடன் சூரியூரில் ஜல்லிகட்டு போட்டி நடைப்பெற்று வருகிறது!
'உள்ளாட்சித்தகவல்' விரைவில் நாளிதழாகவும் வெளிவரும்!

Leave a Reply