செல்போன் பறிப்பு நபர்களை துரத்திப் பிடித்த கமாண்டோ பிரிவு காவலர்!

கமாண்டோ படைப்பிரிவில் பணிபுரியும் தலைமைக் காவலர் சி.வி.வினோத்குமார்.

செல்போன் பறிப்பு நபர்களை துரத்திச் சென்று பிடித்த கமாண்டோ பிரிவு காவலரை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை, மருதம் கமாண்டோ படைப்பிரிவில் பணிபுரியும் தலைமைக் காவலர் சி.வி.வினோத்குமார் என்பவர், 17.12.2018 அன்று இரவு 08.30 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் மந்தைவெளி நோக்கி சென்றபோது, நின்றிருந்த இளம் பெண்ணை தாக்கி வாலிபர் ஒருவர், செல்போனை பறித்துக் கொண்டு (பதிவு எண். TN07 CM 9447) Honda Dio    என்ற இருசக்கர வாகனத்தில் மற்றொரு நபருடன் ஏறி இருவரும் தப்பிச் சென்றனர்.

உடனை தலைமைக் காவலர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றபோது, வாகனத்தை பிடித்தபடி சாலையில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது தகவலின் பேரில் E-4 அபிராமபுரம் காவல் நிலைய விசாரணையில், மந்தைவெளி பகுதியில் பதுங்கியிருந்த இளஞ்சிறார்கள் 2 பேரை காவல்துறையினர்  பிடித்தனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கண்ட சம்பவத்தில் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல், குற்றவாளியை பிடிக்க முற்பட்ட கமாண்டோ படைப்பிரிவு தலைமைக் காவலர் சி.வி.வினோத்குமார் (த.கா.எண்.27147) என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன்,  நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

-ஆர்.அனுசுயா.

 

Leave a Reply