தொன்மையான நூலகம் முதல், தற்கால நூலகம் வரை!- தேசிய கருத்தரங்கு திருச்சி தேசியக் கல்லூரியில் நடைப்பெற்றது.

தேசியக் கல்லூரி மற்றும் கல்வி நிலைய நூலக கூட்டமைப்பும் இணைந்து,  தொன்மையான நூலகம் முதல் தற்கால நூலகம் வரை, சோதனைகளும், வாய்ப்புக்களும் என்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கு, திருச்சி தேசியக் கல்லூரியில் இன்று நடைப்பெற்றது. இதில் அழகப்பா பல்கலைக்கழக நூலகர் முனைவர். பா.கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். 

பெங்களுர் தேசிய தரம் மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் முனைவர் கணேஷ் ஹெகடே துவக்க உரையாற்றினார். அவரது துவக்க உரையில், தொன்மையான நூலகங்கள் வாசிப்பாளரை நோக்கி போகாது. ஆனால், தற்கால நூலகங்கள் வாசிப்பாளரை தன் பக்கம் இழுப்பதுடன் நின்றுவிடாமல் வாசிப்பதை ஒரு புதிய அனுபவமாக்கி கொண்டு இருக்கிறது. மேலும், தற்போதுள்ள ஆராய்ச்சி மற்றும் தரம் மேம்படுத்தப்பட்ட நூலகங்கள் இணையதளம் வாயிலாக நூலகங்களின் கூட்டமைப்புகளோடு இணைந்து ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய வரபிரசாதமாக விளங்குகிறது. ஆனால், இணைய வசதி மற்றும் நூலகங்களை கணிணி மயமாக்குவதற்கும் தானியங்கிகளாக மாற்றுவதற்கும் ஏற்படும் பொருளாதார தேவையே இத்துறை சந்திக்கும் மிகப்பெரிய சோதனையாகும். அனைவரும் இயக்கும் வண்ணம் உள்ள எளிமையாக நூலக மென்பொருளே மிகப்பெரிய வாய்ப்பாகவும் இருப்பதாக கூறினார்.      

இந்த கல்வி ஆண்டு ஓய்வு பெற இருக்கும் நூலகர் மற்றும் தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் பா.ராகவனின் திறமைகளை முனைவர் கணேஷ் ஹெகடே வெகுவாகப் பாராட்டினார்.

அதன் தொடர்ச்சியாக தேசியக் கல்லூரியின் செயலர் ரகுநாதன் கருத்தரங்கின் விழா மலரை வெளியிட்டார். தேசியக் கல்லூரி முதல்வர் முனைவர். ரா.சுந்தரராமன் தலைமையுரை நிகழ்த்தினார். அவரது தலைமையுரையில், ராகவனின் முனைப்பும், ஆட்சிமை திறமைகளையும் பாராட்டி, அவரது பணி நிறைவு வாழ்க்கை சிறக்க வாழ்த்தினார்.

மேலும், இவ்விழாவில் தேசியக் கல்லூரியின் தேர்வு நெறியாளர் முனைவர். வே.நந்தகோபால், முன்னாள் பாரதிதாசன் பல்கலைகழகத்தின் ஆட்சி மன்ற குமு உறுப்பினர் முனைவர் டா.முத்துராமகிருட்டினன், தேசியக் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் கலைப் புலன் முதன்மையர் முனைவர். சா. ஈஸ்வரன், கல்வி நிலைய நூலக கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்  முனைவர். மா. துரைராசன்,  கல்வி நிலைய நூலக கூட்டமைப்பின் முன்னாள் பொருளாளர் முனைவர். ரா. ஜெயபால் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.

வாழ்த்திப் பேசிய அனைவருக்கும் நூலகர் பா.ராகவன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

நிறைவாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை நூலகர் முனைவர். மா.சங்கர் நன்றியுரையாற்றினார்.

-ஆர்.மார்ஷல்.

 

 

Leave a Reply