ஏற்காட்டில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. ஊராட்சி ஒன்றிய திறந்தவெளி கலையரங்கத்தில் சேலம் மாவட்ட சட்ட பணிகள் சார்பு நீதிபதி ரவிச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இம்முகாமில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், தலைமை குற்றவியல் நீதிபதி சிவஞானம், முதன்மை கூடுதல் நீதிபதி ராமகிருஷ்ணன், மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கமணி, மருது கணேஷ், கணேசன், சேலம் மாவட்ட கோட்டாட்சியர் குமரேஸ்வரன், ஏற்காடு வட்டாட்சியர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசந்தர்  மற்றும் காவல் ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் வருவாய், சுகாதாரம், காவல், கால்நடை, வனம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டு தங்கள் துறை சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றியும், அதனை பெறுவதற்கு மக்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்தும் விளக்கி கூறினர்.

இம்முகாமில் ஏற்காட்டில்  உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். மேலும் மக்களிடமிருந்து பலதரப்பட்ட 457 மனுக்கள் பெறப்பட்டன. முகாமிற்கு மனு அளிக்க வந்திருந்த மனு எழுத தெரியாத மக்களுக்கு, சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 26 பேர் தன்னார்வலர்களாக கலந்துக்கொண்டு அவர்களுக்கு மனுக்களை எழுதிக்கொடுத்தனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சட்டபணிகள் ஆணைக்குழுவின் முதன்மை நிர்வாக உதவியாளர், ஏற்காடு பகுதி தன்னார்வலர்கள் அர்ச்சுனன் ஹரி ஆகியோர் செய்திருந்தார்.

-நவீன்குமார் .

Leave a Reply