திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை கருத்தரங்கு (PRAGYAN) இன்று தொடங்கியது.

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை கருத்தரங்கு (PRAGYAN) இன்று தொடங்கியது. இதன் தொடக்க விழா மாலை 05.30 மணிக்கு நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவை இந்திய விண்வெளி மற்றும் அறிவியல் கழகத்தின் வேந்தரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான முனைவர் பி. என்.சுரேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

ப்ரக்யான் (PRAGYAN) – ஆலோசகர் முனைவர். ஜெரோம் விருந்தினர்களை வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து ப்ரக்யான் (PRAGYAN) -ன் தலைவர் நித்தில் ஹாரிஸ் இவ்விழாவைப்பற்றி விவரித்தார், அதன் தொடர்ச்சியாக திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தின் இயக்குனர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் தலைமையுரை ஆற்றினார். இதன் தொடர்ச்சியாக மாணவர் நல்வாழ்வு துறைத்தலைவர் முனைவர். சாம்சன் மாத்தியூ சிறப்புரை ஆற்றினார். விழாவினை SCHNEIDER ELECTRICTS நிறுவனத்தில் மேலாளர் விரேந்திர வசம் செட்டி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தொடக்க விழாவின் இறுதியில் PRAGYAN – ன் ஒருங்கிணைப்பாளரான சந்தோஷ் நன்றியுரை ஆற்றினார்.

இவ்விழாவினை முனைவர் பி.என்.சுரேஷ் அவர்களின் சிற்பபுரை ஆற்றி தொடங்கிவைத்தார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு அவரோடு கலந்துரையாடினர். இதைத் தொடர்ந்து மும்பையை சேர்ந்த PARCHAI நிழல் நடனக்குழுவினரின் கலை நிகழ்ச்சி அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. PRAGYAN விழா மார்ச் – 4 தேதிவரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஆர்.சிராஜுதீன்.

 

 

 

 

 

 

Leave a Reply