அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் ஜல்லிக்கட்டு காளை வீரமரணம்!- நல்லடக்கம்…!- வீடியோ & படங்கள்.

கொம்பன் காளையுடன் அமைச்சர் Dr.c.விஜயபாஸ்கர். (File Photo.)



புதுக்கோட்டை மாவட்டம், தென்னலுாரில் இன்று நடைப்பெற்ற ஜல்லிகட்டு போட்டியில், தமிழக குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் (ஜல்லிகட்டு காளை) வீரமரணம் அடைந்தது.

வாடிவாசலை விட்டு வெளியே வரும் போது சுவற்றில் இடித்து கொம்பன் (ஜல்லிகட்டு காளை) மயங்கி விழுந்தது. முதலுதவிக்கு பின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், காளையின் தலையில் பலத்த அடிபட்டதால் வீரமரணம் அடைந்தது. கொம்பன் காளைக்கு அமைச்சர் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.  

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply