மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கியதில் பல கோடி முறைகேடு! – தி.மு.க. ஆட்சியில் நடந்த தில்லு முல்லு!  

thiruvarur.jpg3

ஒரு கடலைத் தோட்டத்தில் செடிமட்டும் அப்படியே இருக்கும். ஆனால், பூமிக்கடியில் கடலை இருக்காது. இது தி.மு.க.வினர் செய்த ஊழல்!

தோட்டத்தில் செடிமட்டும் இருக்காது.  ஆனால், பூமிக்கடியில் கடலை அப்படியே பத்திரமாக இருக்கும். இது மற்ற கட்சினர் செய்த ஊழல்!

இப்படி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் தி.மு.க.வினரை மிஞ்சுவதற்கு இந்த உலகில் யாருமில்லை.

இந்தியாவில் முதன் முதலில் ஊழலுக்காகவே ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது என்றால், அது சர்க்காரியா கமிஷன்தான். அந்த ஊழலில் இருந்து தப்பிப்பதற்காகதான் காவிரி நதிநீரையும், தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த கச்சத் தீவையும், காவுக் கொடுத்தார் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் ஊழல் செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த மு.கருணாநிதி. இன்று உத்தமப் புத்திரனை போல பேசி வருகிறார். ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிதான் முழுமையான எடுத்துக்காட்டு.

இன்று காவிரியில் கர்நாடக மாநில ஆட்சியாளர்கள் அணைக்கட்டுவதைப் பற்றியும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதைப் பற்றியும், பத்திரிகைகளில் பக்கம், பக்கமாக அறிக்கை வெளியிட்டு, தமிழக மக்களுக்காக நீலி கண்ணீர் வடிக்கும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி.

அவரது ஆட்சிக் காலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்களுக்கும், நிவாரணம் வழங்கியதில் பல கோடி முறைக்கேடு நடந்துள்ளதே! இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

THANJAVUR2

இவை நதியோ அல்லது ஏரியோ அல்ல! நெல் பயிரிடப்பட்ட வயல்கள்! (டிசம்பர் 2010-ல் எடுக்கப்பட்ட படம்)

இவை நதியோ அல்லது ஏரியோ அல்ல! நெல் பயிரிடப்பட்ட வயல்கள்! (டிசம்பர் 2010-ல் எடுக்கப்பட்ட படம்)

மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அதாவது 2010- ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த வடக்கிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் விவசாயப் பயிர்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. அதன்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

காவிரி தண்ணீரைக் குடித்து வளர்ந்தவன் என்றும், விவசாயிகளின் உண்மையானப் பாதுகாவலன் என்றும், தன்னை தானே வர்ணித்து கொள்ளும் மு.கருணாநிதி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்களுக்கு, நிவாரணம் வழங்குவதாக பல அறிவிப்புகளை அப்போது வெளியிட்டார்.

pr061210a

pr071210ipr071210pMKpr301110_10491 copy pr301110_10492 copy

குறிப்பாக 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17,18 மற்றும் 19-தேதிகளில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளை, மத்திய குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

Joint Secretary of Union Ministry of Home Affairs L Viswanathan visited the flood-affected areas in Nagapattinam district

A.Muralidharan, Senior Research Officer, Central Planning Commission.

வெள்ளம் பாதித்தப் பகுதிகளைப் பார்வையிட்ட மத்திய குழுவினர். (டிசம்பர் 2010-ல் எடுக்கப்பட்ட படம்)

வெள்ளம் பாதித்தப் பகுதிகளைப் பார்வையிட்ட மத்திய குழுவினர். (டிசம்பர் 2010-ல் எடுக்கப்பட்ட படம்)

ஆனால், பயிர்சேதங்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்சேரவில்லை.

அப்போதைய தி.மு.க. ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் முழுமையான ஆதரவுடன், போலியான பயனாளிகளின் பட்டியலை தயார் செய்து கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர்.

4THANJAVUR

வெள்ளம் பாதித்தப் பயிர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு பார்வையிட்ட போது எடுத்தப்படம். (டிசம்பர்-2010)

வெள்ளம் பாதித்தப் பயிர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு பார்வையிட்ட போது எடுத்தப்படம். (டிசம்பர்-2010)

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்ற பழமொழிக்கு ஏற்ப நாகபட்டினம் மாவட்டத்தில் நடந்த முறைக்கேட்டை முதலில் பார்ப்போம்.

நாகபட்டினம் மாவட்டத்தில், இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன. ஒன்று நாகபட்டினத்தையும், மற்றொன்று மயிலாடுதுறையையும், மையமாக வைத்து செயல்பட்டு வருகின்றன.

நாகபட்டினம் வருவாய் கோட்டத்தில், நாகப்பட்டினம், வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேலூர் ஆகிய வட்டங்களும், மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய வட்டங்களும் உள்ளன.

இதில் நாகபட்டினம் வட்டத்தில் 85 வருவாய் கிராமங்களும், வேதாரண்யம் வட்டத்தில் 61 வருவாய் கிராமங்களும், திருக்குவளை வட்டத்தில் 35 வருவாய் கிராமங்களும், கீழ்வேலூர் வட்டத்தில் 55 வருவாய் கிராமங்களும், மயிலாடுதுறை வட்டத்தில் 65 வருவாய் கிராமங்களும், சீர்காழி வட்டத்தில் 94 வருவாய் கிராமங்களும், குத்தாலம் வட்டத்தில் 59 வருவாய் கிராமங்களும், தரங்கம்பாடி வட்டத்தில் 70 வருவாய் கிராமங்களும் உள்ளன.

இதில் வேதாரண்யம் வட்டம், அகத்தியன் பள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட மோட்டாண்டி தோப்பு, கீழத்தெரு, ராஜாளிகாடு, பயத்தவரன்காடு, குமரன்காடு, கூத்தன்காடு, மேலக்காடு, மாதாகோவில் தெரு, கணக்கன்காடு, குட்டாச்சிகாடு, சிறைமீட்டான்காடு, தீவகாடு, மணியந்தீவு, கீழ ஆறுமுக கட்டளை, மேல ஆறுமுககட்டளை, தெற்குகாடு ஆகிய குக்கிராமங்களில் மட்டும் 32383.0 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், வடக்கிழக்கு பருவமழையால் சேதம் அடைந்ததாக 764 பேருக்கு போலியானப் பயனாளிகள் பட்டியல் தயார் செய்து, 32 லட்சத்து 38 ஆயிரத்து 300 ரூபாயை கொள்ளையடித்து உள்ளனர்.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Page-10

Relief Fund  (4)Relief Fund  (2)
Relief Fund  (1)
Relief Fund  (3)

இதற்கு. அப்போதைய வேதாரண்யம் வட்டாட்சியர் அசோகன், துணைவட்டாட்சியர்கள் ராமசந்திரன், விஜயகுமார், வேதாரண்யம் தொடக்க கூட்டுறவு வங்கி மேலாளர் சதாசிவம், அகத்தியன் பள்ளி வருவாய் ஆய்வாளர் துரைகண்ணன், அகத்தியன் பள்ளி கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், அகத்தியன் பள்ளி கிராம (தலையாரி) உதவியாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் இந்த முறைக்கேட்டில் நேரடி தொடர்புடையவர்கள். இவர்களை உரிய முறையில் விசாரித்தால் உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும்.

ஒரு வருவாய் கிராமத்திலே 32 லட்சத்து 38 ஆயிரத்து 300 ரூபாய் முறைக்கேடு நடைபெற்று இருக்கிறது என்றால், தமிழகம் முழுவதும் எவ்வளவு கொள்ளையடித்து இருப்பார்கள் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

ஒரு விவசாயி பயிர் நிவாரணம் பெறவேண்டுமானால் வேளாண்மை தொடக்க கூட்டுறவு சங்கத்தில் வங்கி கணக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் மட்டும்தான் நிவாரணம் பெறமுடியும்.

இதில் கொடுமை என்னவென்றால், போலியான பயனாளிகளின் பட்டியல் தயாரித்ததோடு மட்டுமில்லாமல் பயனாளிகளின் பெயரில் போலியான வங்கி கணக்கும் தொடங்கி, நிவராணத் தொகையை அதிகாரிகளும், அப்போதைய தி.மு.க. ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்துக் கொள்ளையடித்துள்ளனர்.

ஒரே சர்வே எண்ணையும், ஒரே குடும்ப அட்டை எண்ணையும், பயன்படுத்தி பலபேருக்கு பலமுறை பயிர் நிவாரணம் வழங்கியதாக பயனாளிகள் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதில் இதை விட பெரிய  கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலத்தின் சர்வே எண்களில் 50 சதவீதம் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களாகும்.

பயனாளிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பலபேருக்கு நிலங்களே இல்லை என்பதும், அவர்கள் நிவாரணத் தொகை பெறவில்லை என்பதும், அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

மேலும், பயனாளிகள் பட்டியலில் முழுமையான முகவரி குறிப்பிடப்படவில்லை. பயனாளிகளிடம் கையெழுத்தும் பெறவில்லை.

மு.பன்னீர் செல்வம்.

மு.பன்னீர் செல்வம்.

இது குறித்து வேதாரண்யம் வட்டம், மணியந்தீவு கிராமத்தைச் சேர்ந்த மு.பன்னீர் செல்வம் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் போராடி, இந்த ஊழலை கண்டு பிடித்து இருக்கிறார்.

அதன் பிறகு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், நாகப்பட்டினம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் விழிப்புதுறை (Vigilance and Anti Corruption)  காவல் ஆய்வாளருக்கும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் நிருவாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை ஆணையருக்கும், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், எழுத்துப் பூர்வமாக பல முறை புகார் மனுக் கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினால், அது மறுபடியும் அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கே விசாரணைக்காக திரும்பி வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் ஆட்சித்தலைவர் முனியநாதன்.

நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் ஆட்சித்தலைவர் முனியநாதன்.

கொன்றவனிடமே நியாயம் கேட்டால் எப்படி நீதி கிடைக்கும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் ஆட்சித்தலைவர் முனியநாதனுக்கு தெரிந்தேதான் இம்முறைக்கேடு நடைபெற்று இருக்கிறது.

அதனால்தான், இப்போது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் முனியசாமி அவரை காப்பாற்றும் நோக்கத்தில் இம்முறைக்கேட்டை மூடிமறைக்கப் பார்க்கிறார்.

நாகப்பட்டினம் மாவட்ட  ஆட்சித்தலைவர் முனியசாமி.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனியசாமி.

2011-ம் ஆண்டு ஜீன் மாதம் 6-ந் தேதி முதல் இன்றுவரை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் முனியசாமி, வருவாய் நிர்வாகத்தில் சுமார் 39 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். ஒரு விசயத்தைக் கேட்டவுடனேயே கிரகித்து கொள்ளக் கூடியவர். ஆனால், இந்த முறைக்கேட்டில் மவுனம் காத்து வருகிறார்.

அவர் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும், மக்களுக்கு பயன்படவில்லை. மாறாக, ஊழல் செய்வதற்கும், ஊழலில் தொடர்புடையவர்களை காப்பாற்றவும் தான் பயன்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.  

ஆயிரம்தான் போட்டி, பொறாமைகள், கருத்து வேறுபாடுகள், இருந்தாலும், ஒரு அதிகாரி, ஒரு சக அதிகாரியை அவ்வளவு எளிதில் காட்டிக் கொடுக்கமாட்டார்கள். அதுதான் அவர்களது ஒற்றுமை.

ஆட்சி பொறுப்பில் இருந்து தி.மு.க. அகற்றப்பட்டாலும் தமிழக அதிகாரிகளில் 50 சதவீதம் பேர் இன்னும் தி.மு.க.விற்கு ஆதரவாகதான் செயல்பட்டு வருகிறார்கள். முறைகேடுகளில் ஈடுப்பட்ட தி.மு.க.வினரையும், அதிகாரிகளையும் காப்பாற்றுவதற்கு  இன்றும் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றார்கள்.

இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களும் உடந்தையாக இருந்துள்ளார்கள். இன்றும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.

2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2011 –ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட வெள்ள நிவாரணப் பயனாளிகள் பட்டியலை, நேர்மையான நபர்களை கொண்டு நேரடி களஆய்வு செய்தால் இன்னும் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in