மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு ஏற்காட்டில் நடைப்பெற்றது!  

ye1611P3

ye1611P2

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு, ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில், கட்சியின் மூத்த உறுப்பினர் வெள்ளயைன் கட்சி கொடியேற்ற மாநாடு துவங்கியது.

பின்னர் கட்சியினர் பேரணி அண்ணா பூங்கா, பஸ் நிலையம், டவுண் ஆகிய பகுதிகளை கடந்து மாநாடு அரங்கிற்கு வந்து நிறைவடைந்தது.

ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மாநாட்டிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுராமன் துவக்க உரை ஆற்றினார். . மாவட்ட செயற்குழு உறுப்பினர் குழந்தைவேலு சிறப்புரை ஆற்றினார்.   ஒன்றிய செயலாளர் பழனிசாமி ஆண்டு வரவு, செலவு அறிக்கை வாசித்தார்.

ஒன்றிய குழு உறுப்பினர்கள் கண்ணாடி ராஜ், ருக்மனி, தில்லைக்கரசி, முத்துராமன் ஆகியோர் ஏற்காட்டின் 9 பஞ்சாயத்து மக்களுக்கும் குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும், எஸ்டேட் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், .எஸ்.,பி.எப் மருத்துவ வசதி செய்ய வேண்டும்,

மாரமங்களம் முதல் கொட்டச்சேடு வரை சாலை அமைக்க வேண்டும், ஏற்காடு வாழ் மக்களிடம் டோல்கேட்டில்  சுங்க வரி சூலிக்க கூடாது, ஏற்காடு ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், மழைவாழ் பள்ளி மாணவர்களுக்கு 30 நாட்களுக்குள் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்,

ஏற்காட்டில் விளையும், காபி, மிளகு, பழங்கள் ஆகியவற்றிர்கு பதப்படுத்தும் ஆலை அமைக்க வேண்டும்,ஏற்காட்டிற்கு மேட்டுர் நீர் வழங்க வழி செய்ய வேண்டும், வன மசோதா சட்டப்படி நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,

ஏற்காட்டில் பஸ் டிப்போ அமைக்க வேண்டும், பஸ் நிலையத்தை மாற்றும் முடிவை கை விட வேண்டும்,மாண்போர்ட் பள்ளி அருகே உள்ள அலங்கார ஏரியை தூர்வார வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

 -நவீன் குமார்.