காவிரி பிரச்னையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவது தேவையற்றது : மத்திய அமைச்சர் அனந்தகுமார் அடாவடி!

மத்திய இரசாயனத்துறை அமைச்சர் அனந்த்குமார்.

மத்திய இரசாயனத்துறை அமைச்சர் அனந்த்குமார்.

காவிரி பிரச்னையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவது தேவையற்றது,” என, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் பெங்களூரில் இன்று (15.06.2014) கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என, பிரதமர் மோதி, என்னிடம் கூறினார். மத்திய நீர் பாசன துறை அமைச்சர் உமா பாரதியும், இதை உறுதி செய்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அடிக்கடி கடிதம் எழுதி வருவது தேவையற்றது. காவிரி பிரச்னையில், அவர் அரசியல் நடத்துகிறார் என, மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அனந்த் குமார் இப்படி பேசுவது, முதல் முறையாக இருந்தால் மன்னித்து விட்டு விடலாம். ஆனால், தொடர்ந்து பல முறை இப்படி அடாவடியாகவே பேசி வருகிறார்.

இதுக் குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 13.06.2014 அன்று எழுதிய விரிவானக் கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், வெங்கையா நாயுடு மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி ஆகியோர் பேசியிருப்பது, தமிழக மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு பிறகும் கூட, இன்று (15.06.2014) மத்திய அமைச்சர் அனந்த் குமார் இப்படி அடாவடியாக பேசியிருப்பது, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் கட்டுப்பாட்டில், அனந்த் குமார் அமைச்சராக இல்லையோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடுநிலையோடும், நேர்மையோடும், சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டும், குடியரசு தலைவர் முன்னிலையில் அளித்த சத்திய பிரமாணத்திற்கு பாத்திரமாக, சாதி, மதம், இனம், மொழி பேதமின்றி, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் அமைச்சராக செயல்பட வேண்டிய ஒருவர்,

இந்தியாவின் இறையாண்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்திலும், உண்மைக்கு புறம்பாக பகிரங்கமாக செய்தியாளர்களிடம் பேசியிருப்பது, இந்தியாவின் ஒட்டு மொத்த அதிகாரமும், இவர் கையில்தான் இருக்கிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி என்ன பதில் சொல்ல போகிறார்?

டாக்டர்.துரைபெஞ்சமின்.