இலங்கை கடற்படையின் செயல்பாடுகள் இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தையை சீர்க்குலைக்கும் முயற்சியாக உள்ளது : பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம்

jayalalithaபிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

pr050314_147 copyஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடத்தி சென்று சிறைவைக்கப் படுவதால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயல்களை வேதனையோடு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கடந்த 3–ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவர்கள் மற்றும் காரைக்காலை சேர்ந்த 2 மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் தாங்கள் வழக்கமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்த நான் உங்களுக்கு 20–3–2013 அன்று கடிதம் எழுதி இருந்தேன். அதன்படி சென்னையில் 27.1.2014 அன்று இலங்கை–தமிழக மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தது.

இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு மீனவர்களிடையே அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை கொழும்பில் வருகிற 13.3.2014 நடந்த திட்டமிடபட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தைக்கு முன்பு இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நமது மீனவர்கள் 32 பேரையும் அவர்களது 8 படகுகளையும் இலங்கை படையினர் கடத்தி சென்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையின் இந்த விரும்ப தகாத செயல், இலங்கையில் வருகிற 13–ந்தேதி நடைபெற உள்ள இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தையை சீர்க்குலைக்கும் முயற்சியாக உள்ளது.

இலங்கை கடற்படையின் இந்த செயல்களை இந்திய அரசு மவுனமாக வேடிக்கை பார்ப்பது, தமிழக அப்பாவி மீனவர்களின் நலனிலும் அவர்களது குடும்பத்தின் மீது அக்கறையில்லாமல் இருப்பதையே காட்டுகிறது. இலங்கை சிறைகளில் ஏற்கனவே 116 தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறையில் 5 தமிழக மீனவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். எனவே தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தூதரக அளவில் தொடர்பு கொண்டு இலங்கை சிறைகளில் உள்ள 153 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களது 39 மீன்பிடி படகுகளை மீட்கவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.