சிங்கப்பூர் அரசாங்க இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

singapur websiteசிங்கப்பூர் அரசாங்கம் இணையம் தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்த அன்று தான், அரசாங்க இணைய தளங்கள் தாக்குதலுக்கு இலக்காகின என்று தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம்  தெரிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் வழக்கத்துக்கு மாறாக, மிக அதிகமானோர் அரசாங்க இணைய தளங்களை நாடினர். இதன் மூலம் இணைய ஊடுருவல் சாத்தியமாகியிருக்கலாம் என்றும் ஆணையம் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறியது.

கடந்த வார மிரட்டல்களுக்குப் பிறகு, அரசாங்க அமைப்புகள் தங்கள் இணைய தளங்கள் ஊடுருவுவதைத் தடுக்கும் வழிகளைத் தயார்நிலையில் வைத்திருந்தன. அப்படி இருந்தும் பொதுமக்கள் கடந்த 07.11.2013 வியாழக்கிழமை இரவு 11.17 மணிக்கு பிரதமர் அலுவலக இணைய பக்கத்துக்கும் பின்னிரவு 12.20 மணிக்கு இஸ்தானா இணைய பக்கத்துக்கும் செல்ல எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. ‘கூகல்’ தேடுதல் தளம் மூலம் மேற்கண்ட இணைய பக்கங்களுக்குச் செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதால், இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்கலாம் என்றும் பிரதமர் அலுவலகம், இஸ்தானா ஆகியவற்றின் இணைய பக்கங்கள் நல்ல நிலையில் செயல்படுகின்றன என்று பாதிக்கப்பட்ட இணைய பக்கங்களின் பகுதிகள் சரி செய்யப்பட்டு வருகின்றன என்றும் ஆணையம் கூறியது. போலிசும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.