குவாரியில் மணல் அள்ளிய வழக்கு : விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி ஆஜர்

pommudiவிழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறையில் அரசு விதிமுறையை மீறி செம்மண் குவாரியில் மணல் அள்ளி அரசுக்கு இழப்பீடு செய்ததாக சிலர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வானூர் தாசில்தார் புகார் செய்தார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி வெற்றிச்செல்வி முன்னிலையில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜரானார். அவருடன் ஜெயச்சந்திரன், சதானந்தம், குமார், கோபிநாத் ஆகியோரும் ஆஜரானார்கள். பொன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 15–ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நவம்பர் 15–ந் தேதி செம்மண் குவாரி வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்று தெரிகிறது.