சிங்கப்பூரில் இந்திய பெண் தீயில் எரிந்து மரணம்!

fire

சிங்கப்பூர் பாலஸ்டியர் திடலில் எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துச் சிங்கப்பூர் போலிஸ் படைக்குச் சிங்கப்பூர் நேரப்படி சரியாக காலை 11.47 மணிக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடந்ததாகத் தெரிவித்தனர்.

பெண் சடலம் கிடந்த பாலஸ்டியர் திடலுக்குச் சென்ற சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை மருத்துவ அதிகாரிகள் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவித்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறையினரால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

 

 

 

 

 

 

 

இந்நிலையில் இந்தத் தீச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தமிழ் முரசிடம் அது குறித்துப் பதற்றத்துடன் விவரித்தனர். அவர்களில் ஒருவர் திரு அப்பண்ணா அப்பாராவ்,49. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் (ஐஏ) திடல் பராமரிப்பாளர். மலேசியரான இவர் கடந்த 14 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார்.

நேற்றும் வழக்கம்போல காலையில் தமது பணியை ஆரம்பித்துள்ளார். திடலில் புல்வெட்டும் இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்த வேளையில், பெண் ஒருவர் கையில் பிளாஸ்டிக் பையுடன் சிலோன் விளையாட்டுச் சங்கத்துக்குச் சொந்தமான விளையாட்டுத் திடலில் நடந்து செல்வதை பார்த்ததாக தமிழ் முரசிடம் கூறினார் திரு அப்பண்ணா.

விவரம்: அச்சுப் பிரதியில்

 

Leave a Reply