இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது : வைகோ பேச்சு

vaiஇலங்கை அரசை கண்டித்தும், மத்திய அரசின் அணுகுமுறையை கண்டித்தும், சென்னை, அண்ணாநகர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பொது மக்கள் இன்று (31.03.2013) உண்ணாவிரத்தில் குதித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் இலங்கை அரசை கண்டித்தும், மத்திய அரசின் அணுகுமுறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசும் போது வைகோ கூறியதாவது:-

இலங்கையில் சிங்கள ராணுவம் நடத்திய இனப் படுகொலை உலகில் எங்குமே நடந்திராத கொடுமை. இந்த கொடுமைக்கு பாடம் புகட்ட போர் குற்றவாளியான ராஜபக்சே சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்பட ஒட்டு மொத்த தமிழினமே கிளர்ந்து எழுந்துள்ளது. நம் சொந்தங்கள், நம் உறவுகள் கண்ணீரும், கம்பலையுமாக கதறுவதை பார்த்து பொதுமக்களே வீதிக்கு வந்து தங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷீத் ஏற்க முடியாது என்கிறார். இதை பொதுமக்களின் குமுறலும், இலங்கை தமிழர்கள் சிந்திய ரத்தமும், வேதனை குரலும் சும்மா போகாது.

காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது. பொது வாக்கெடுப்பு கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை போல் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இவ்வாறு வைகோ பேசினார்.

Leave a Reply