மாணவர்கள், தொழில்முனைவோரிடையே கொண்டு சேர்க்கும் வகையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

கால நிலை மாற்றம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ‘‘காலநிலை அறிவு இயக்கம்’’ விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கர், பழனிவேல் தியாகராஜன், மெய்யநாதன், தலைமைச்செயலர் இறையன்பு, மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலர் சுப்ரியா சாஹு, அரசு துறைச்செயலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply