இந்திய கடலோர காவல் படைக்காக புதிய கப்பல் கட்டுமான பணி தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது.

இந்திய கடலோர காவல் படைக்காக மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனம் தயாரிக்கும் ஆறு அடுத்த தலைமுறை தொலைதூர கடலோர காவல் கப்பல்களில், நான்காவது கப்பலின் அடிக்கல் நாட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று (2026 ஜூன் 25) நடைபெற்றது. நவீன இயந்திரங்கள், அதிநவீன அமைப்புகளைக் கொண்ட இக்கப்பல், மத்திய அரசின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, மசகான் டாக் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் இந்திய கடலோர காவல் படை, மசகான் டாக் நிறுவனத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆறு கப்பல்களைக் கட்டுவதற்கான இந்த ஒப்பந்தம் 2023 டிசம்பர் 20 அன்று இறுதி செய்யப்பட்டது. இந்தத் திட்டம் இந்திய கடலோர காவல் படையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தவும் உதவும். இது நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

Leave a Reply