தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாக சரியாக கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், ஒருவர் படுகாயமடைந்திருப்பதும் வேதனைக்குரியது.

தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து குணமடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடி விபத்து ஏற்படுவது மிகவும் கவலைக்குரியது.

பட்டாசு ஆலைகளில் அன்றாடம் வேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளிகளின் உயிருக்கு எப்போது ஆபத்து நேரும் என்று தெரியாமலேயே உழைக்கிறார்கள்.

உழைக்கும் வர்க்கத்தினருக்கு பாதுகாப்பு என்பது மிக மிக அவசியம். அப்படியென்றால் பட்டாசு ஆலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் வகையில் அரசின் கோட்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

தமிழக அரசும் பட்டாசு ஆலைகளை தொடர் கண்காணிப்பின் மூலம் ஆய்வு செய்து முறையாக சரியாக இயக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply