பெண் அரசு அதிகாரிகளின் இணையப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் வகையில் சைபர் சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக இதனை தெரிவித்துள்ள அவர், இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தித் திறன்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றார். இத்திட்டத்தின் கீழ் பெண் காவலர்கள், சைபர் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பயிற்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை பல பெண் அரசு அதிகாரிகள் இணையப் பாதுகாப்புப் பயிற்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 பெண் அரசு அதிகாரிகளுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பெண் அரசு அதிகாரிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்அபுணர்வை ஏற்படுத்தித் தற்காப்பு முறைகளை வலுப்படுத்தப் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
திவாஹர்
