ஜனநாயகம் பறிபோய்விட்டது. இனியும் இது போன்ற நிலை வருங்கால தேர்தலில் நடைபெறாமல் இருக்க வேண்டும். ஜனநாயகம் காப்பாற்றப்பட. வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய நிலை ஏற்பட வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலின் முடிவு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி அல்ல.தி.மு.க மற்றும் அதன் கூட்டணியின் பணநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே, ஆளும் கட்சியினர் ஆட்பலம், பணபலம், அதிகார பலம் ஆகியவற்றால் மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் நியாயத்தையும், ஆளும் தி.மு.க அரசின் மக்கள் விரோதப் போக்கையும் வாக்காளர்கள் கேட்கக் கூடாது என்பதற்காக. வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து, வாக்கை அவர்களுக்கு அளிக்க கட்டுப்படுத்தும் புதுப்பாணியை தி.மு.க கையாண்டது, அரங்கேற்றியது.
மொத்தத்தில் தி.மு.க வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளையும் கடைபிடிக்காமல், விதிகளை மீறி தொடர்ந்து தவறான செயல்பாடுகளை செய்ததால் காங்கிரஸ் கட்சிக்கு செயற்கையான வெற்றி கிடைத்திருப்பாதாக த.மா.கா கருதுகிறது.
அ.இ.அ.தி.மு.க வின் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மிகச்சிறப்பாக களப்பணியாற்றிய த.மா.கா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் த.மா.கா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
