வீடுகளில் ரேசன் பொருட்களை வழங்கும் டில்லி அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது ஏன்? தேசிய நலன் கருதி, இந்த திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தொற்று பரவும் மையமாக ரேசன் கடைகள் மாறிவிடும். பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்கள் மற்றும் துணிகள் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேசன் பொருட்களை ஏன் வழங்கக்கூடாது. வீடுகளுக்கு ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை. குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் கடந்த 5 முறை மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா, மஹாராஷ்டிரா, டில்லி, ஜார்க்கண்ட் அரசுகள், விவசாயிகள், லட்சத்தீவு மக்கள் என அனைவருடனும் மத்திய அரசு சண்டையிட்டு கொண்டு உள்ளது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு சண்டையிட்டு கொண்டிருந்தால் கொரோனா எப்படி கட்டுப்படுத்த முடியும்?
இவ்வாறு டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
