திருகோணமலை கடற்கரையை சுத்தம் செய்த இலங்கை கடற்படையினர்!

இலங்கையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் மையத்தில் திருகோணமலை அமைந்துள்ளது. இங்குதான் வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலைத் துறைமுகம் உள்ளது.

திருகோணமலைத் துறைமுகம் உள் துறைமுகம் மற்றும் வெளித் துறைமுகம் என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. உள்துறைமுகம் பாறைகளும், நிலங்களும் சூழ்ந்தது மட்டுமில்லாமல், இயற்கையாகவே ஆழம் அதிகமானதும் ஆகும்.

இதனால் நீர்முழ்கிக் கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை இங்கே பாதுகாப்பாக இருக்க முடியும். ரேடார் மற்றும் சோனார் மூலமான கண்காணிப்புகளில் இருந்து தப்பிக்கவும் முடியும்.

திருகோணமலை கடற்கரை பகுதிக்கு வரும் பொதுமக்களும் மற்றும் சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை ஆங்காங்கே வீசியெறிந்து விட்டு செல்வதால், கடற்கரை பகுதி முழுவதும் குப்பைகள், பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சிதறிக் கிடந்தன.

இதையறிந்த இலங்கை கடற்படையினர் திருகோணமலை கடற்கரை பகுதி முழுவதையும் நேற்று (ஆகஸ்ட் 21) சுத்தம் செய்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply