மலபார் 2026 பலதரப்புக் கூட்டுப் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, இந்தியக் கடற்படையின் கிழக்குக் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஏவுகணை தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் சயாத்ரி, 2026 நவம்பர் 04 அன்று ஜப்பானின் யோகோசுகா கடற்படைத் தளத்தைச் சென்றடைந்தது. அங்கு வந்தடைந்த கப்பலுக்கு ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகள் இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சியானது துறைமுகக் கட்டம், கடல் கட்டம் என இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. கூட்டுச் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், கடல்சார் தொழில்முறை நிபுணத்துவப் பரிமாற்றம், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியச் சூழலை உறுதி செய்வதற்கும், பிராந்தியத்தில் ஒத்த கருத்துடைய நாடுகளின் கடற்படைகளுடன் கடல்சார் கூட்டாண்மையை முன்னெடுப்பதற்கும் ஐஎன்எஸ் சயாத்ரியின் இந்த பங்கேற்பு வழிவகுக்கும்.
திவாஹர்
