சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தொழில்நுட்ப ரீதியில் வலிமையான ராணுவத்தை உருவாக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது!-பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தொழில்நுட்ப ரீதியில் வலிமையான ராணுவத்தை உருவாக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், நவம்பர் 3, 2026 அன்று, பாதுகாப்புப் படைகளின் நவீனமயமாக்கல் குறித்த ஆலோசனைக் குழு கூட்டத்தில், பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் பாதுகாப்புச் சவால்கள், போர் முறைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எதிர்காலத்திற்குத் தேவையான, செயல்பாட்டுத் திறன் கொண்ட ராணுவத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், விரிவாக விவாதிக்கப்பட்டன.

போர் புரிவதற்கானச் செயல்பாட்டுத் திறன், படைகளின் தயார்நிலையை மேம்படுத்த, அடுத்த தலைமுறைக்கான தளங்கள், ஆயுதத் தளவாடங்கள், தொழில்நுட்பங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

முப்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, கூட்டுச் செயல்பாட்டுத் திட்டமிடல், பல்வேறு தளங்களில் திறன்களை ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றின் மூலம், மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா போன்ற முயற்சிகளுக்கு உத்வேகம் அளிப்பதற்கும், உள்நாட்டுத் தொழில்துறையினர், புத்தொழில்  நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

எதிர்கால போர்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, செயற்கை நுண்ணறிவு, தன்னாட்சி அமைப்புகள், ஆளில்லா தளங்கள், சைபர் பாதுகாப்பு, விண்வெளி, மின்னணு போர்முறை, மேம்பட்ட தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply