இந்திய ரயில்வே 2026 அக்டோபரில் 145.07 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது

இந்திய ரயில்வே 2026 அக்டோபரில் வலுவான செயல்திறன் மூலம் சரக்குப் போக்குவரத்தில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக 145.07 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 133.93 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளைக் கையாண்டிருந்த நிலையில் இந்தாண்டு 8.32 சதவீதம் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இம்மாதத்தில் பல்வேறு முக்கியப் பொருட்கள் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்தன. உணவு தானியங்கள் 26.3 சதவீதம் அளவிற்கும், உள்நாட்டு நிலக்கரி 16 சதவீதம் அளவிற்கும், இதரப் பொருட்கள் 11 சதவீதம் அளவிற்கும், உள்நாட்டு பெட்டகங்கள் 6.3 சதவீதம் அளவிற்கும், இரும்புத் தாது 5 சதவீதம் அளவிற்கும், கனிம எண்ணெய் 1.9 சதவீதம் அளவிற்கும் சரக்குகள் அதிகளவில் கையாளப்பட்டுள்ளன.

மின் உற்பத்தி நிலையங்களின் கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்ய இந்திய ரயில்வே உள்நாட்டு நிலக்கரி சரக்குப் போக்குவரத்தை அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 469.8 அடுக்குகள் அளவிற்கு நிலக்கரி கொண்டுச் செல்லப்பட்டன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 393.2 அடுக்குகள் அளவிற்கு நிலக்கரி கொண்டுச் செல்லப்பட்டது. இது 19.5 சதவீத வளர்ச்சியாகும்.

Leave a Reply