சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் திட்டமிடப்பட்டப் பணிகளை மத்திய நிலக்கரி அமைச்சகம் மற்றும் அதனுடைய பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன.
அமைச்சகம் சார்பில் 1,565 இடங்களைத் தூய்மைப்படுத்த இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் 2,035 இடங்களைத் தூய்மைப்படுத்தியுள்ளது. 10.18 மில்லியன் சதுரஅடி பரப்பளவை தூய்மைப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில் 14.84 மில்லியன் சதுரஅடி பரப்பளவு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 253 குறைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட 52 குறிப்புகளுக்கும் முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளன.
மொத்தம் 10,909 மெட்ரிக் டன் கழிவுப்பொருட்களை அகற்ற இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் 17,686 மெட்ரிக் டன் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டன. இதன்மூலம் ரூ.61.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. மேலும் 59,593 கோப்புகளை ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் 1,79,793 நேரடி மற்றும் மின்னணு கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 1,70,336 கோப்புகள் தேவையற்றவை என்று கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
திவாஹர்
