தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இன்று (3.11.2026) ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் அவர்கள், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டார்.
முதலமைச்சர் அவர்கள் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கே.பி.சுகுமார்
