காசிமேடு மீனவர்கள் நடுக்கடலில் உயிரிழப்பு: மீதமுள்ள 5 பேரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

அக்டோபர் மாதம் 29ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேர், ஆந்திர கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மாயமானது வருத்தத்துக்குரியது.

சென்னை கடல் பகுதியில் இருந்து புறப்பட்ட மீனவர்கள், ஆந்திர மாநில கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

புயல் காரணமாக 9 மீனவர்களையும் தொடர்பு கொள்ள முடியாமல் கடற்படையினர் தேடி வருகின்றனர்.

இச்சூழலில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் ஓங்கோல் அருகே கரை ஒதுங்கிய 4 உடல்கள் காசிமேடு மீனவர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்ட தகவல் அறிந்தவுடன் காசிமேடு பகுதி மீனவர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மீதமுள்ள 5 மீனவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு உடனடியாக கடலில் மாயமான காசிமேடு மீனவர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தமிழக அரசு மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு த.மா.கா(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply