அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தொழிலாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, திறன்மிக்க மனிதவளம் மற்றும் அரசின் தொலைநோக்குக் கொள்கைகள் ஆகியவை மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் முக்கியப் பங்காற்றுகின்றன.
உற்பத்தி, வாகனங்கள், பொறியியல், ஜவுளி, தோல் பொருட்கள், மருந்துகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்களிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025–26 ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
எஸ்.திவ்யா
