மத்திய வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறையின் கீழ் பீகாரின் மோதிஹரியில் செயல்பட்டுவரும் மகாத்மா காந்தி ஒருங்கிணைந்த வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், விவசாய நிலங்களைப் பாதுகாப்போம் இயக்கம் 2026-ன் கீழ் விவசாயிகளுக்கான கள விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநிலத்தின் கிழக்கு சம்பாரண் பகுதியில் இன்று (2026 அக்டோபர் 27) நடத்தியது. சமச்சீர் உரப் பயன்பாடு, மண்வளப் பாதுகாப்பு, பயிர் பல்வகைப்படுத்துதல், மா, லிச்சி பழத்தோட்டங்களின் நிலையான பராமரிப்பு குறித்து இந்நிகழ்ச்சியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த அந்நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் அமோல் கே ஜாதவ், நீண்ட கால மண் வளத்தைப் பேண மண் பரிசோதனை அடிப்படையிலான சமச்சீர் உரப் பயன்பாட்டின் அவசியத்தை விளக்கினார். கட்டுப்பாடற்ற முறையில் உரமிடுவதைத் தவிர்த்து, மண் பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்ப ஊட்டச்சத்துக்களை வழங்குவது சாகுபடிச் செலவைக் குறைக்கும் எனக் குறிப்பிட்டார். மேலும், பண்ணைக் கழிவுகள், உதிர்ந்த இலைகள், தொழு உரம் ஆகிய இயற்கை வளங்களை மறுசுழற்சி செய்து மண்ணின் கரிம வளத்தை அதிகரிக்குமாறு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
திவாஹர்
