ஜவஹர் மலை ஏறுதல், குளிர்கால விளையாட்டு நிறுவன குழு, லடாக்கில் உள்ள ‘மவுண்ட் க்யாம் சோ மாசிஃப்’ சிகரத்தை அடைந்து சாதனை.

பஹல்காமில் உள்ள ஜவஹர் மலை ஏறுதல், குளிர்கால விளையாட்டு நிறுவனம், லடாக்கின் ரும்த்சே ஃபூ பகுதியில் அமைந்துள்ள ‘மவுண்ட் க்யாம் சோ மாசிஃப்’ மலைத்தொடருக்கு 22 பேர் கொண்ட மலையேற்றக் குழுவை அனுப்பியது. இக்குழுவின் பயணத்தை, குழுத் தலைவர் கர்னல் ஹேம் சந்திர சிங் ஜூன் 26, 2026 அன்று தொடங்கி வைத்தார்.

லடாக் பகுதியில் முறையான தட்பவெப்பச் சூழலுக்குப் பழகும் பயிற்சியை மேற்கொண்ட பிறகு, இக்குழு 2026 ஜூலை 2, அன்று கடுமையான வானிலை சூழல்களிலும் ‘பிடி 5901எம்’ என்ற சிகரத்தை முதலில் அடைந்தது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக, அதே சிகரத்தில், 5600 மீட்டர் உயரத்தில் இருந்து குழுத் தலைவர் முதன்முறையாக பாராகிளைடிங் மூலம் பறந்தார்.

கடுமையான வானிலையை எதிர்த்துப் போராடிய இக்குழு, ஜூலை 3, 2026 அன்று, தொழில்நுட்ப ரீதியாக சவாலான 6090 மீட்டர் உயரமுள்ள சிகரத்தையும், ‘பிடி 5944எம்’ சிகரத்தையும் ஏறி, அசாத்திய மன உறுதி, சகிப்புத்தன்மை, குழுப்பணியின் திறமையை வெளிப்படுத்தியது. சவாலான சூழல்களால் சற்றும் தளராத இக்குழு, ஜூலை 5, 2026 அன்று அந்த மலைத்தொடரின் இறுதிச் சிகரமான ‘மவுண்ட் க்யாம்-III’ (6018 மீட்டர்)-ஐ அடைந்து, முகாமுக்கு வெற்றிகரமாகத் திரும்பியது.

இந்த  மலையேற்றம் சாகச உணர்வையும், தேசியப் பெருமையையும், வெளிப்படுத்துவதுடன், லடாக் பகுதியில் இதுவரை ஆய்வு செய்யப்படாத மலைத்தொடர்களில், இந்தியாவின் வளர்ந்து வரும் செயல்பாடுகளை உறுதிப்படுத்துகிறது.

Leave a Reply