குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜூலை 6, 2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மொசாம்பிக், நிகரகுவா, சூரினாம், கபோனீஸ் குடியரசு, மங்கோலியா, பஹாமாஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம் வழங்கினர்.
- மொசாம்பிக் குடியரசின் தூதர், திரு அர்மாண்டோ பெட்ரோ முயுவேன் ஜூனியர்
- நிகரகுவா குடியரசின் தூதர், நடேஸ்கா இமாரா குத்பர்ட் கார்ல்சன்,
- சூரினாம் குடியரசின் தூதர், திருமதி ஹனிஷா ஜெய்ராம்,
- காபோனீஸ் குடியரசின் தூதர், திரு ஆரேலியன்-மார்செல் மின்ட்சா நுகுமா,
- மங்கோலியா நாட்டின் தூதர், மேதகு டாக்டர் உல்ஜித் லவசஞ்சாவ்,
- பஹாமாஸ் காமன்வெல்த் தூதர், திரு பீட்டர் நிக்கோலஸ் சைமனெட்,
ஆகியோர் நியமனக் கடிதங்களை வழங்கியவர்கள் ஆவர்.
திவாஹர்
