மத்தியப்பிரதேசத்தில் தாட்டியா, குஜராத்தில் மஞ்சல்பூர், பீகாரில் பான்கிபூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கான இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்பை 2026 ஜூலை 6 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்தத் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
வேட்புமனுத் தாக்கல் செய்ய 2026 ஜூலை 13 கடைசி நாளாகும். அடுத்தநாள் (ஜூலை 14) வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 2026 ஜூலை 16 கடைசி நாளாகும். தேவைப்பட்டால் 2026 ஜூலை 30 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் எண்ணும் பணி 2026 ஆகஸ்ட் 3 அன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.
திவாஹர்
