ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று (ஜூலை 7) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 3 முதல் 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் கூடுதலாக 1,000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் அளித்திடும் வகையில், சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்த உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கும், செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தின் விரிவாக்கத்திற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
எஸ்.திவ்யா
