அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் ச ஜோசப் விஜய்; தாய்மார்களிடம் நலன் விசாரிப்பு.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.தான் பிறந்த எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் முதல்வர் விஜய் வந்தார். அங்கு ஆய்வில் ஈடுபட்டதுடன், மகப்பேறு டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவமனையில் வழங்கப்படும் சுகாதார சேவைகள், வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அங்கிருந்த தாய்மார்களிடம் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளை வாங்கி கொஞ்சினார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சேவை பற்றியும் தாய்மார்களிடம் கருத்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, அமைச்சர் அருண் ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Leave a Reply