புதுதில்லியில் உள்ள தேசிய சுகாதார அமைப்பு வள மையத்தில் நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்ச்சியில், ஆயுஷ்மான் சுகாதார மையங்களில், முதன்மை சுகாதார சேவைகளை வழங்கும் ஐந்து வகையான பணியாளர் பிரிவினருக்கான பயிற்றுனர்களுக்குப் பயிற்சியளிக்கும் தேசிய அளவிலான பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிலரங்கு மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், தேசிய சுகாதார இயக்கத்தின் செயல்பாட்டு இயக்குநருமான திருமதி ஆராதனா பட்நாயக் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமதி ஆராதனா பட்நாயக், பொதுச் சுகாதார நிலையங்களில், திறன்மிக்க, தரமான சுகாதாரப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பொது சுகாதார சேவைகள் மீதான சமூகத்தின் நம்பிக்கையை வலுப்படுத்த ஏதுவாகத் தரச் சான்றிதழ் பெறுவதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். விரிவுபடுத்தப்பட்ட செயல்பாட்டு மாதிரியின் மூலம், பணியாளர் பிரிவைச் சார்ந்த பயிற்சிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். 2026 ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பிராந்திய பயிற்சி நிறுவனங்கள் மூலம் இந்தப் பயிற்சித் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா
