புதுதில்லியில் நடைபெற்ற இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சுகாதார அரங்கை சுமார் 1.50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
‘இளைஞர்களின் இந்தியா, ஆரோக்கியமான இந்தியா’ என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்ட இந்த அரங்கில், நோய்கள் வரும் முன் தடுப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த அரங்கில் 24 தேசிய சுகாதாரத் திட்டங்கள் சார்பில் 39 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, கண் பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், உடல் எடை மதிப்பீடு, வாய் நலப் பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மனநலம், ஊட்டச்சத்து, புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுதல் குறித்த ஆகியவை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
மேலும், ஆகிய மின்னணு சுகாதாரச் சேவைகள் குறித்தும் விளக்கப்பட்டது. அவசர முதலுதவிப் பயிற்சி, காசநோய் விழிப்புணர்வு நாடகங்கள், மருத்துவர்களின் கலந்துரையாடல்கள் ஆகியவையும் நடைபெற்றன.
குழந்தைகளுக்காகத் தனி விளையாட்டுப் பகுதி அமைக்கப்பட்டு, உடற்பயிற்சி, பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவை மூலம் ஆரோக்கியமான பழக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டன.
திவாஹர்
