இந்திய ரயில்வே சார்பில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

இந்திய ரயில்வே சார்பில், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவை 2026 அக்டோபர் 30-ம் தேதி அன்று, புதுதில்லியில் உள்ள ரயில் பவனில் நடைபெற்றது. ரயில்வே வாரிய தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான திரு சதிஷ்குமார் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், ரயில்வே வாரிய உறுப்பினர்கள், பொது இயக்குநர்கள், ரயில்வே அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சிறப்பு இயக்கம் 6 மூலம் இந்திய ரயில்வே சார்பில், சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மருத்துவ முகாம் ஆகியவையும் நடைபெற்றன. ரயில் பவனில் தூய்மைப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை ரயில்வே வாரிய தலைவர் சதீஷ்குமார் பரிசு வழங்கி கவுரவித்தார். ரயில்வே ஊழியர்கள் ஒருங்கிணைந்து தூய்மைப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.      

Leave a Reply